லிபரன் அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது – த.மு.மு.க தலைவர்

லிபரன் அறிக்கை ஏமாற்றமளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார் மனித நேய மக்கள் கட்சியின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத் தலைவருமான டாக்டர்.M.H.ஜவாகிருல்லாஹ். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் “சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த 68 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணைக் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது , முன்பே தெரிந்ததுதான் என்றாலும் வரவேற்கத்தகுந்தது” என்று கூறியுள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்து 17 வருடங்கள் கழிந்த நிலையில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள லிபரன் விசாரணைக்கமிஷன் அறிக்கை மீது அரசு முறையான நடவடிக்கை எடுக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் “நீதிமன்றங்களால் நிரந்தர தீர்வு காணமுடியாத இந்த பிரச்னைக்கு ஹிந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகள் இடையே பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணமுடியாதா?” என்ற கேள்விக்கு பதிலளித்த ஜவாகிருல்லாஹ், “இந்த விஷயத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்ட வேண்டுமென்றால், பாபர் மசூதி அமைந்திருந்த இடம் குறித்த நில உரிமை வழக்கு விரைவில் முடிக்கப் பட்டு அதில் கிடைக்கும் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் , அது ஒன்றுதான் சரியான தீர்வாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

1 மணி நேர லெக்சருக்கு ரூ.82,000 10 வயது பொடியன் 2 கம்பெனிக்கு சி.இ.ஓ.

கோலாலம்பூர் : மலேசியாவை சேர்ந்த 10 வயது பொடியன், 2 கம்பெனிகளுக்கு தலைமை செயல் அதிகாரியாக கலக்குகிறான். படிப்பை பாதியில் விட்ட அவனுக்கு, கல்லூரிகளில் 1 மணி நேரம் விரிவுரையாற்ற ரூ.82,000 தரப்படுகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் செரியனா அலியாஸ். இவரது மகன் ஆதி புத்ர அப்துல் கனி. வயது 10. செரியானா 2 நிறுவனங்களைத் தொடங்கி ஆதி என்ற பெயரில் விட்டமின் மாத்திரைகளை விற்பனை செய்து வருகிறார். அப்துல் கனி, 3ம் வகுப்பு வரை படித்தான். ஆனால், தனது பாடத் திட்டத்துக்கு மீறி, இயற்பியல், வேதியியல், கணிதம், புவியியல், உயிரியல் ஆகிய பிரிவுகளில் அடுக்கடுக்கான அறிவை வெளிப்படுத்தினான். இன்டர்நெட்டில் புகுந்து எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தான்.

அறிவுத் தேடலுக்கு இடையே, அன்னையின் பிசினசையும் கவனித்துக் கொள்ளத் தொடங்கினான். இப்போது 2 நிறுவனங்களின் செயல்பாட்டையும் ஏறக்குறைய தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளான் அப்துல் கனி. அதனால், அந்த கம்பெனிகளின் தலைமைச் செயல் அதிகாரி என அவனை அழைக்கின்றனர்.வயதுக்கு மீறிய அறிவாளித்தனம் காரணமாக, மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய அப்துல் கனி, Ôபாடப் புத்தகங்களைப் படிப்பதை விட இன்டர்நெட்டில் அதிகம் அறிய முடிகிறது என்கிறான். இதற்கிடையே, பல பாடப் பிரிவுகளில் அவனுக்கு உள்ள அபார ஞானத்தை அறிந்த மலேசிய கல்லூரிகள், அவனை பகுதி நேர விரிவுரையாளராக அழைக்கின்றன.அம்மாவின் கம்பெனி நிர்வாகத்தைக் கவனிப்பதுடன்,

கல்லூரிகளில் விரிவுரை ஆற்றுவது, இன்டர்நெட்டில் மூழ்குவது என இருக்கிறான் அப்துல் கனி. ஒரு மணி நேர விரிவுரைக்கு ரூ.82,300 ஊதியம் பெறுகிறான். இஸ்லாமிய ஆய்வுக் கல்வியில் விரிவுரையாளராக விரும்புவதாக கூறும் சிறுவனை, கனடா, சிங்கப்பூர், அமெரிக்காவில் படிக்க வைக்க அவனது தாய் திட்டமிட்டுள்ளார்.

MHJ@MTT

தீவிரவாத இந்து அமைப்பை தடை செய்ய-வேண்டும்

கோவா கிராம பஞ்சாயத்து தீர்மானம்
சனாதன் சான்ஸ்தா எனும் தீவிரவாத இந்து அமைப்பை தங்கள் கிரா-மத்தில் செயல்பட அனு-மதிக்க கூடாது என்றும் அதனை தடை செய்ய-வேண்டும் என்றும் கோவா மாநிலத்தைச் சேர்ந்த பன்டேரா கிராம பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சனாதன் சான்ஸ்தா-வின் ஆசிரமம் அமைந்-துள்ள ராம்நத்தியையும் உள்ளடக்கிய இந்த கிரா-மப் பஞ்சாயத்து, மார்-கோவா குண்டு வெடிப்-பைத் தொடர்ந்து, சனா-தன் சான்ஸ்தாவை தடை செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 2003 ஆம் ஆண்டு இந்த கிராமத்தில் சனாதான் சான்ஸ்தாவின் ஆசிரமம் அமைக்கப்பட்டது.

கடந்த அக்டேபர் 16ஆம் தேதி கோவாவின் வணிகத் தலைநகரான மார்கோவாவில் நடை-பெற்ற குண்டு வெடிப்-பில் சனாதன் சான்ஸ்தா உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டனர். காவல்-துறையின் விசாரணை-யில்,அந்த இருவரும் வெடிகுண்டை வாகனத்-தில் எடுத்துச் செல்லும்-போது வழியிலேயே குண்டு வெடித்துவிட்ட-தாக அறியப்பட்டது.

வாசகர்களின் வினாக்களுக்கு விடைத்தர இசைந்துள்ளார்கள்!!

முத்துப்பேட்டை இனையதளம் புதிய வடிவில்வடிவமைக்கபட்டதை தொடர்ந்து இன்னும் பல நல்ல விஷயங்களைமக்களுக்கு கொன்டுச் செல்வதே முக்கிய நோக்கமாக கருதி இன்ஷாஅல்லாஹ்தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தலைவரும்மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கினைப்பாளருமான பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் www.muthupet.org இணையத்தளத்தில் வாசகர்களின் வினாக்களுக்கு விடைத்தரஇசைந்துள்ளார்கள்!! எனவே, தமிழ் கூறும் நல்லுக வாசகர்களே,ஆயத்தமாகுங்கள் உங்கள் கேள்வியை தொடுக்க!

அரசியல்

சமுதாயம்

மனித உரிமை

தேர்தல் களம்

இஸ்லாம்

இஸ்லாமிய வங்கி

இன்னும் இத்தனைக்காலம் உங்கள் மனக்கிடங்கில் போட்டுவைத்தகேள்விகளை ask@muthupet.org க்கு அனுப்பித்தாருங்கள்.

அனுப்ப வேண்டிய கடைசித்தேதி- டிசம்பர் 05/09.

சகோதரர்களே!  இணையத்தொடர்பு இல்லாத சகோதரசகோதரிகளிடமும் தகவல் கொடுத்து நீங்களே அவர்களின்கேள்வியைப்பெற்று அனுப்பித்தரலாம்!

இப்படிக்கு.

முத்துப்பேட்டை இணையதளம்

www.muthupet.org

ஏர்ஆசியா வழங்கும் 10 லட்சம் ‘இலவச விமான டிக்கெட்டுகள்’!

செலவு விமான நிறுவனங்களிலேயே உலகின் மிகக் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனம் என்ற விளம்பரபடுத்தியுள்ள ஏர் ஆசியா, பயணிகளுக்கு அதிரடிச் சலுகையாக 10 லட்சம் இலவச டிக்கெட்டுகளை வழங்குகிறது. ஏர் ஆசியா விமானங்கள் செல்லும் அனைத்து நாடுகளுக்கும் இந்த இலவச டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.இந்த டிக்கெட்டுகளை ஏர் ஆசியாவின் இணையதளத்தில் பதிவு செய்து பெற வேண்டும்

ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த குண்டு துளைக்காத உடை எங்கே?

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தனது கணவரும், பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தலைவருமான ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த குண்டு துளைக்காத உடை எங்கே? என்று அவரது மனைவி கவிதா கர்கரே கேள்வி எழுப்பியுள்ளார். குண்டு துளைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது உடலில் குண்டு துளைக்காத உடை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின் போது கவிதா கர்கரே இதைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது: எனது கணவர் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்படும் போது அவர் குண்டு துளைக்காத உடையை அணிந்திருந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேனில் ஏற்றிய போதும் அவர் குண்டு துளைக்காத உடை அணிந்திருந்ததை மும்பை தாக்குதல் சம்பவத் தொலைக்காட்சி காட்சிகளில் காண முடிந்தது.

ஆனால் நான் அவரை மருத்துவமனையில் பார்க்கும்போது குண்டு துளைக்காத உடை இல்லை. எங்கே போனது அந்த உடை என்பது தெரியவில்லை.

அவர் இறந்து சில மாதங்கள் ஆன நிலையில் இந்தக் குண்டு துளைக்காத உடை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கோரியிருந்தேன். அதற்கு எனக்கு, “உடை தொலைந்துவிட்டது’ என்ற ஒரே வரியில் பதில் கிடைத்துள்ளது. அந்த உடை எப்படி தொலைந்தது என்பது உள்ளிட்ட எவ்வித விளக்கமும் இல்லை என்றார்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை காவலர்கள் கையாண்ட விதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள கவிதா கர்கரே, பயங்கரவாதிகளை ஒடுக்க தனது கணவர் வேண்டுகோளுக்கு இணங்க வீரர்கள் அனுப்பி வைக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகள் தாக்குதலை அறிந்ததுமே அவர்களை உயிருடன் பிடித்துவிட எனது கணவர் முயற்சித்துள்ளார். அதற்காகக் கூடுதல் போலீûஸக் கோரியுள்ளார். 40 நிமிடங்கள் வரை அவர் காத்திருந்தும் வீரர்கள் அனுப்பி வைக்கப்படவில்லை.

அவர் கேட்டத் தருணத்தில் காவலர்களை அனுப்பி வைத்திருந்தால் அஜ்மல் கசாப் மட்டுமன்றி தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளையும் உயிருடன் பிடித்திருக்க முடியும். அவர்களின் தாக்குதலை முறியடித்திருக்க முடியும் என்று கவிதா கர்கரே கூறினார். எனது கணவர் போலீஸ் துறையில் மிக உயர்ந்த அதிகாரி. அவர் நினைத்தால் ஏ.சி. அறைக்குள் அமர்ந்து கொண்டு காவலர்களுக்கு கட்டளை பிறப்பித்து அதை நிறைவேற்றவும் இயலும். ஆனால் அவர் தனது பணிக்காலத்தில் எப்போதுமே இப்படி நடந்து கொண்டதில்லை. எங்கு ஒரு பிரச்னை என்றாலும் அந்த இடத்தில் தான் முதலில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். இறுதி மூச்சுவரை அதையே தனது கொள்கையாகக் கடைப்பிடித்தவர் என்று கவிதா கர்கரே கூறும்போது உணர்வுப்பூர்வமாக இருந்தது.

சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும்

தொழில் சம்பந்தமான பணிகளால் இரவில் நன்றாக தூங்கவில்லையா? இரவில் வெகுநேரம் கண்விழித்து படிக்கிறீர்களா? இது பிற்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

மூளையின் நுட்பமான பகுதிகளின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.

எலிகளை நீண்ட நேரம் தூங்க விடாமல் செய்து அவற்றின் மூளை செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர்.

அப்போது எலியின் மூளையில் தசைகள், பீட்டா செல்கள் பாதிக்கப்பட்டன. இதன்மூலம் “அல்சிமர்” நோய் ஏற்படுவதும் தெரிகிறது.
எனவே இரவில் சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும்.

உடற்பயிற்சினால் உண்டாகும் நன்மைகள்

உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன, அதனால் உடலுக்கு நலமும் பலமும் வளமும் மிகுதியாக கிட்டுகின்றன.

பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும்.

செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.

கை, கால், கணுக்கால், மார்பகம், இடுப்பு ஆகிய இடங்களில் தேவையான அளவு தசைகள் அமையும். கன்னத்திலே தொங்குகின்ற தசை, தோல்களிலே கனத்து தடித்திருக்கின்ற தசை, விலா எலும்புகளுக்குக் கீழே விரிந்து வளர்ந்து அடர்ந்திருக்கின்ற தசை ஆகியன மறையும்.

ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும்.

மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்கள் உருவாகும்; நடையில் நளினம் மலச்சிக்கலைத் தவிர்க்கும். மனத்தை மகிழ வைக்கும்; சுறுசுறுப்போடு இயங்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரும்.

இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலை வளம் பெறச் செய்யும். அடிக்கடி ஏற்படும் தலைவலி அறவே நீங்கும்.

இத்தனைக்கும் மேலாக எடுப்பும், சிறப்பும் மிகுந்த உடலமைப்பைத் தந்து, வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கத் தூண்டும்; நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள், அந்த நல்ல மனம் அமைய வழி வகுக்கும்.

உடல் செழுமையும் வளமும் பெற

பயிற்சி 1

ஓரடி அகளம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமும் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 2

முதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும். பயிற்சி

பயிற்சி 3

முதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 4

மூன்றாம் பயிற்சியை போலவே நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்தி முன் பாதங்களில் நிற்க வேண்டும். குதிகால் தரையில் படாமல் சற்று நேரம் நின்ற பிறகு முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும்.இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும். பயிற்சி 5 முதல் பயிற்சியை போலவே இரு கைகளையும் ஊன்றி நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். குதிகால் தரையில் இருக்கும்படியே குதிகால் மீது உட்கார வேண்டும் கீழே குனியாமல், நேர்கொண்ட பார்வை இருக்க வேண்டும். சற்று நேரம் நின்ற பிறகு முன் நிலைக்கு எழுந்த பிறகே மூச்சை விட வேண்டும்.

இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். மூச்சை இழுக்கும் முக்கியத்துவத்தை அறிவோம் அதனை முறையாக கற்று கொள்ளப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். மூச்சை இழுத்து விடும் பயிற்சிக்கு மேற்கூறிய பயிற்சிகளை, முன்னே குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் செய்ய வேண்டும். தினந்தோறும் பயிற்சியின் அளவை மிகுதிபடுத்திக் கொண்டே வர வேண்டும். ஒரே மூச்சில் எவ்வளவு காற்றை அதிகம் இழுக்கிறோமோ அவ்வளவுக்கு இரத்த ஓட்டம் விரைவு பெரும். உடல் செழுமையும் வனப்பும் பெறும். அழகு மிளிரும்.நிமிர்ந்த மார்பு வாய்க்கும். மார்பகங்கள் செழிப்பாய் இருக்கும் . இடை குறுகும், தோல் அழகிய நிறம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும்.

ஆகவே, பயிற்சியை செய்யும் போது மூச்சை இழுத்துவிட வெளிவிடுகின்ற முறையைச் சரிவரக் கற்றுக் கொள்ள வேண்டும்

மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்

 

வாழைப்பழம் – எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழம். வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.
அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 200 மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் காலை, மதியம், இரவில் சாப்பிட்டு முடித்ததும் அவர்களுக்கு உட்கொள்ள வாழைப்பழம் கொடுக்கப்பட்டது. சில வாரங்களுக்கு பிறகு அவர்களிடம் எந்த திறன் மேம்பட்டு இருக்கிறது என்று ஆராய்ந்தார்கள்.

அந்த ஆய்வில், உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிட்ட அனைத்து மாணவர்களது மூளையின் செயல்பாட்டுத் திறனும் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை, அப்போது நடந்த அந்த மாணவர்களது தேர்வு முடிவும் உறுதி செய்தது.

அதாவது, அந்த தேர்வில் மேற்படி மாணவர்கள் அனைவரும் வழக்கமாக பெறும் மதிப்பெண்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது என்பதால், நீங்களும் குறைந்த விலையில் எளிதாக எங்கும் கிடைக்கும் வாழைப்பழத்தை தினமும் வாங்கி சாப்பிடலாமே

Follow

Get every new post delivered to your Inbox.