ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த குண்டு துளைக்காத உடை எங்கே?

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தனது கணவரும், பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தலைவருமான ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த குண்டு துளைக்காத உடை எங்கே? என்று அவரது மனைவி கவிதா கர்கரே கேள்வி எழுப்பியுள்ளார். குண்டு துளைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது உடலில் குண்டு துளைக்காத உடை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின் போது கவிதா கர்கரே இதைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது: எனது கணவர் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்படும் போது அவர் குண்டு துளைக்காத உடையை அணிந்திருந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேனில் ஏற்றிய போதும் அவர் குண்டு துளைக்காத உடை அணிந்திருந்ததை மும்பை தாக்குதல் சம்பவத் தொலைக்காட்சி காட்சிகளில் காண முடிந்தது.

ஆனால் நான் அவரை மருத்துவமனையில் பார்க்கும்போது குண்டு துளைக்காத உடை இல்லை. எங்கே போனது அந்த உடை என்பது தெரியவில்லை.

அவர் இறந்து சில மாதங்கள் ஆன நிலையில் இந்தக் குண்டு துளைக்காத உடை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கோரியிருந்தேன். அதற்கு எனக்கு, “உடை தொலைந்துவிட்டது’ என்ற ஒரே வரியில் பதில் கிடைத்துள்ளது. அந்த உடை எப்படி தொலைந்தது என்பது உள்ளிட்ட எவ்வித விளக்கமும் இல்லை என்றார்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை காவலர்கள் கையாண்ட விதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள கவிதா கர்கரே, பயங்கரவாதிகளை ஒடுக்க தனது கணவர் வேண்டுகோளுக்கு இணங்க வீரர்கள் அனுப்பி வைக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகள் தாக்குதலை அறிந்ததுமே அவர்களை உயிருடன் பிடித்துவிட எனது கணவர் முயற்சித்துள்ளார். அதற்காகக் கூடுதல் போலீûஸக் கோரியுள்ளார். 40 நிமிடங்கள் வரை அவர் காத்திருந்தும் வீரர்கள் அனுப்பி வைக்கப்படவில்லை.

அவர் கேட்டத் தருணத்தில் காவலர்களை அனுப்பி வைத்திருந்தால் அஜ்மல் கசாப் மட்டுமன்றி தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளையும் உயிருடன் பிடித்திருக்க முடியும். அவர்களின் தாக்குதலை முறியடித்திருக்க முடியும் என்று கவிதா கர்கரே கூறினார். எனது கணவர் போலீஸ் துறையில் மிக உயர்ந்த அதிகாரி. அவர் நினைத்தால் ஏ.சி. அறைக்குள் அமர்ந்து கொண்டு காவலர்களுக்கு கட்டளை பிறப்பித்து அதை நிறைவேற்றவும் இயலும். ஆனால் அவர் தனது பணிக்காலத்தில் எப்போதுமே இப்படி நடந்து கொண்டதில்லை. எங்கு ஒரு பிரச்னை என்றாலும் அந்த இடத்தில் தான் முதலில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். இறுதி மூச்சுவரை அதையே தனது கொள்கையாகக் கடைப்பிடித்தவர் என்று கவிதா கர்கரே கூறும்போது உணர்வுப்பூர்வமாக இருந்தது.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.